செம குட் நியூஸ்..!! கூட்டுறவுத் துறையில் 13,12,717 பேரின் நகைக்கடன் தள்ளுபடி..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்த உடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களை கண்டறிவதற்காக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யவும் நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய கூட்டுறவுத்துறை அறிவுரைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், கூட்டுறவுத்துறையில் 13,12,717 பேரின் ரூ.4,818 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஒரு குடும்பத்தில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்று 31.3.2021 வரை நிலுவையில் இருந்த நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : குவைத் தீவிபத்து..!! தமிழர்களின் நிலை என்ன..? 5 பேர் பலி..? அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!!