For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

The District Collector has announced a holiday for schools and colleges on August 29 on the occasion of Velankanni Mata festival.
08:13 AM Aug 29, 2024 IST | Chella
நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை     ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
Advertisement

ஆகஸ்ட் 29ஆம் தேதியான இன்று வேளாங்கண்ணி மாதா திருவிழாவினை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள் திருவிழாக்களுக்காக உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விடுமுறைக்கான உத்தரவை மாவட்ட அளவில் அந்த ஆட்சியர்கள் பிறப்பிக்கின்றனர். அந்த வகையில், நாகை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வருவார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆகஸ்ட் 29ஆம் தேதியான இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாக்களில் அமைந்திருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்தையொட்டி நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தாலுகாக்களிலும் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கான விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 29ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Read More : பிளஸ் 2 முடித்திருந்தால் போதும்..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!

Tags :
Advertisement