செம குட் நியூஸ்..!! ஜிஎஸ்டி வரி அதிரடியாக குறைகிறது..!! எதற்கெல்லாம் தெரியுமா..? மத்திய அரசு முக்கிய முடிவு..!!
பல ஆண்டுகளாக ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு தவணைக்கு GST-இல் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் முடிவால், 22,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
20 லிட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி குறிப்பேடுகள் மீதான ஜிஎஸ்டியை 12-இல் இருந்து 5 சதவீதமாக குறைக்கவும், ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியங்கள் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியங்களில் ரூ.5 லட்சம் வரை கவரேஜ் கொண்ட ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
சைக்கிள் மற்றும் நோட்டுகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்கவும், உயர் ரக கைக்கடிகாரங்கள் மற்றும் காலணிகளுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் மீது ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவு எடுக்கும்.
15,000 ரூபாய்க்கு மேல் கொண்ட காலணிகள் மற்றும் 25,000 ரூபாய்க்கு மேல் விலையுள்ள கைக்கடிகாரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்தவும், 20 லிட்டர் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீருக்கான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Read More : பாஸ்டேக் கட்டணத்தில் வந்த புதிய மாற்றம்..!! வாகன ஓட்டிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!