முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

செம குட் நியூஸ்..!! இனி இவர்களுக்கும் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்கும்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

05:01 PM Apr 24, 2024 IST | Chella
Advertisement

திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் அனைவருக்கும் மாதம் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்தது. ஆனால், உரிமைத்தொகை தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் தான் எனக்கூறி மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தனர். இதையடுத்து, மீண்டும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரிமைத்தொகை வழங்கும் படி அறிவிப்பை வெளியிட்டது.

Advertisement

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்து அமைச்சர்கள் சிலர் அவதூறாகவே பேசி வந்தனர். இதனால், பெண்கள் மத்தியில் திமுக மீது அதிருப்தி உண்டாகியுள்ளது. தற்பொழுது, மக்களவை தேர்தலையொட்டி, பிரச்சாரத்தின்போது வாக்குக்களை கவர உரிமைத்தொகையானது அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வாக்குறுதி அளித்தனர்.

அந்தவகையில் மறுவாழ்வு மையத்தில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், முன்னாள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்காது என்று முதலில் கூறப்பட்டது. தற்போது, அவர்களின் வாக்குகள் ஏதும் திமுகவுக்கு சாதகமாக இல்லாததை அறிந்த முதல்வர், ஓய்வு பெற்ற முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கும் உரிமை தொகை வழங்குவது குறித்து கலந்தோசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதேபோல இத்திட்டத்திற்கு தகுதி பெற்றும் பணம் பெறாத நபர்களுக்கு இம்மாதம் இறுதியில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். இது குறித்து தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பித்து பணம் வராத அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அந்தவகையில் முதற்கட்டமாக மறுவாழ்வு மையத்தில் உள்ள பெண்களுக்கு வழங்க ஆணை வெளியாகியுள்ளது.

Read More : ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சொத்துக்களை பறித்துவிடுவார்கள்”..!! பிரதமர் மோடி கடும் விமர்சனம்..!!

Advertisement
Next Article