முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆதார் அப்டேட் குறித்து வெளியான செம குட் நியூஸ்..!! மக்களே இதை கவனிச்சீங்களா..?

The deadline for free renewal of Aadhaar card has been extended by another 3 months.
08:25 AM Sep 13, 2024 IST | Chella
Advertisement

ஆதார் அடையாள ஆவணமாக மட்டுமின்றி, நாட்டு மக்கள் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகள், பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களுக்கு தேவைப்படுகிறது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் சேவைகளை பெறுவதற்கு தனிமனித அடையாளமாக ஆதார் அட்டை திகழ்கிறது.

Advertisement

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. 10 ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் புதுப்பித்துக் கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள், கைரேகையை புதிதாக பதிவு செய்யப்படும்.

இந்நிலையில், ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க மேலும் 3 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

Read More : வாகன ஓட்டிகளே..!! உடனே நம்பர் பிளேட்டை மாத்துங்க..!! செப்.15-க்கு பிறகு சிக்கனால் அபராதம் தான்..!!

Tags :
ஆதார் அட்டைஆதார் ஆணையம்மத்திய அரசு
Advertisement
Next Article