செம குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் அதிரடி உயர்வு..!! மத்திய அரசு அறிவிப்பு..!!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றிற்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக இந்த ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இனி 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான, முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, மத்திய, மாநில அரசுகள் வாக்காளர்களை கவரும் விதமாக எந்தவொரு நலத்திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது. அப்படி அறிவித்தால், அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்றமாகும். அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் கடுமையாக எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தான், ஊதிய உயர்வானது கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துள்ளதாக, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஊதியத்தை உயர்த்தும் நடவடிக்கை பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Read More : ”நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார்”..!! ஓபிஎஸ் மகன் பரபரப்பு பேட்டி..!!