For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பகீர்...! ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு... ராகுலுக்கு கடிதம்

Selvaperunthakai linked to Armstrong's murder..
05:55 AM Sep 20, 2024 IST | Vignesh
பகீர்     ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு    ராகுலுக்கு கடிதம்
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இக்கொலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

Advertisement

இது குறித்து ராகுல் காந்திக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், செல்வப்பெருந்தகை இதற்கு முன் 2008 முதல் 2010 வரை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராகச் செயல்பட்டிருக்கிறார். இதுமட்டுமல்லாமல், புரட்சி பாரதம், புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளிலும் இருந்திருக்கிறார். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் இவர்மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், இவர் வட தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ் உள்ளிட்டவற்றில் ரவுடி கும்பல்களை பயன்படுத்தியிருக்கிறார்.

ரவுடி கும்பல் தலைவர் நாகேந்திரன் ஆயுள் தண்டனையில் வேலூர் சிறையில் இருக்கிறார். அவரின் மகன் ரவுடி அஸ்வத்தாமன் தான் தமிழக இளைஞர் காங்கிரஸின் முதன்மைச் செயலாளர். இவர், நாகேந்திரனுக்கும், செல்வப்பெருந்தகைக்கும் நிறைய வேலைசெய்திருக்கிறார். இளைஞர் காங்கிரசில் அந்தப் பதவியில் அவரை நியமித்ததும் செல்வப்பெருந்தகைதான். மேலும், இவர் கொலை மிரட்டல் விடுவது, தொழிலதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது என பல செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். அதில் வரும் பணத்தை செல்வப்பெருந்தகையுடன் ஷேர் செய்திருக்கிறார். இதுபோன்ற ரவுடி கும்பலின் உதவியுடன் செல்வப்பெருந்தகை இந்தக் கொலை சம்பவத்துக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார்.

ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்பதால் காவல்துறை தயக்கம் காட்டுகிறது. எனவே, செல்வப்பெருந்தகையை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீக்கினால்தான் தமிழக மக்கள் மத்தியில் காங்கிரஸின் மதிப்பு நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement