முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மனித உடலுறுப்புகள் விற்பனை..? மர்மமான முறையில் 100 பேரின் உடல்கள் அடக்கம்..!! நீலகிரியில் திடுக்கிடும் சம்பவம்..!!

Bagheer's investigation revealed that more than 100 people who died in a mental asylum that was operating without permission in the Nilgiris were buried in a place near the asylum without anyone knowing about it.
07:29 PM Jul 12, 2024 IST | Chella
Advertisement

நீலகிரியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மனநலக் காப்பகத்தில் இறந்த 100-க்கும் மேற்பட்டோரை யாருக்கும் தெரியாமல் காப்பகம் அருகே உள்ள இடத்தில் புதைத்ததாக விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பெக்கி என்ற இடத்தில் அகஸ்டின் லவ்ஷேர் என்ற பெயரில் ஒரு சாரிடபிள் டிரஸ்ட்டை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளை 1999 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அவர் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அகஸ்டின் அந்த அறக்கட்டளையை மனநலக் காப்பகமாக மாற்றி நடத்தி வந்துள்ளார். இந்த காப்பகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

200 பேர் உறவினர்களால் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், மீதமுள்ள 300-க்கும் மேற்பட்டோர் தங்குவதற்கு இடமில்லாத நிலை இருந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு, சுகாதார வசதியின்றி அவர்கள் அவதிப்பட்டுள்ளனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு யாரோ புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 9ஆம் தேதி அந்த காப்பகத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், அந்த காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

அங்கிருந்த 13 மனநோயாளிகள் மற்றும் இரு பணியாளர்களை கோவை மற்றும் ஊட்டி காப்பகங்களில் சேர்த்தனர். இந்த காப்பகத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. அவர்களுடைய உடல்கள் காப்பகத்தை ஒட்டியுள்ள சதுப்பு நிலத்தில் யாருக்கும் தெரியாமல் நல்லடக்கம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, காப்பக உரிமையாளர் அகஸ்டின், அவருடைய மனைவி கிரேசி, காப்பக பொறுப்பாளர் எலிசபெத் உள்பட 10 பேரிடம் நெலாக்கோட்டை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், காப்பகத்தில் இருந்த 16 வயதில் சிறுவன் ஒருவன் அகஸ்டின் தன்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அகஸ்டின் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்பகத்தில் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை நடத்திய பிறகே இந்த காப்பகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து தெரியவரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, இறந்தவர்களின் உடலுறுப்புகள் ஏதேனும் விற்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனென்றால், அனுமதியின்றி காப்பகம் நடத்தி வந்த அகஸ்டின், அண்மையில் புதர் என்ற திரைப்படத்தை ரூ.2.43 கோடி செலவில் தயாரித்துள்ளார். இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : இரண்டாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியம்..!! இனி மின் கட்டணம் எப்படி இருக்கும்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tags :
காப்பகம்நீலகிரிபணப்பரிமாற்றம்
Advertisement
Next Article