செல்ஃபி மோகத்தால் விபரீதம்!. நீரில் மூழ்கி 5 இளைஞர்கள் உயிரிழப்பு!. தெலுங்கானாவில் சோகம்!
Telangana: தெலுங்கானாவில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது நீர்த் தேக்கத்தில் தவறி விழுந்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் கொண்டபோச்சம்மா சாகர் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்தநிலையில், ஐதராபாத்தை சேர்ந்த நண்பர்கள் 7 பேர் கொண்டாபோச்சம்மா கோவிலுக்கு பயணம் செய்துள்ளனர். அப்போது, நீர்த்தேக்கத்தில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்றபோது நண்பர்கள் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 5 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். உயிரிழந்தவர்கள் தனுஷ்(20), லோஹித்(17) தினேஷ்வர்(17), ஜதின்(17)சாஹில்(17) ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர். மேலும் முருகாங்க், இப்ராஹிம் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்,
மேலும் இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் தள பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Readmore: நடக்கும் போது தொடைகள் உறசுதா?. ஒரு வாரத்தில் தொடையை குறைக்க இதை செய்யவும்!.