முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இவ்வளவு தொகையா...? தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.1760 கோடி பறிமுதல்...!

08:56 AM Nov 21, 2023 IST | 1newsnationuser2
Advertisement

மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்படும் பொருட்கள், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்வது இந்திய தேர்தல் ஆணையத்தின் தொடர்ச்சியான முயற்சிகளால் அதிகரித்துள்ளது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ரூ.1760 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது 2018-ம் ஆண்டில் இந்த மாநிலங்களில் நடைபெற்ற முந்தைய சட்டமன்றத் தேர்தல்களில் கைப்பற்றப்பட்டதை விட 7 மடங்கு (ரூ.239.15 கோடி) அதிகமாகும்.

Advertisement

குஜராத், ஹிமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த 6 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ரூ.1400 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த முறை தேர்தல் செலவின கண்காணிப்பு அமைப்பு மூலம் கண்காணிப்பு செயல்முறையில் தொழில்நுட்பத்தையும் ஆணையம் இணைத்துள்ளது.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் 20.11.2023 நிலவரப்படி அதிகபட்சமாக தெலங்கானாவில் ரூ.659 கோடியே 20 லட்சம் மதிப்பிலான ரொக்கம், மதுபானம், ஆபரணங்கள், இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement
Next Article