பெரியாரை சீண்டிய சீமான்..!! காலியான நாம் தமிழர் கூடாரம்..!! இன்று திமுகவில் இணையும் 3,000 தம்பிகள்..!!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3,000 பேர் இன்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக கட்சியில் இருந்து விலகியவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், கட்சி கூட்டங்களுக்கு வருவதில்லை, தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிவர்கள் பெரும்பாலும் திமுகவிலேயே இணைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பெரியார் குறித்து சீமான் தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நிலையில், இதை கண்டித்து மேலும் பலர் கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நாதகவில் இருந்து விலகியவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (ஜனவரி 24) நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 38 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் என 3,000 பேர் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Read More : பதவிக்கு ரூ.15,000 லட்சமா..? இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!! நேரடியாக விசாரணை நடத்தும் விஜய்..!!