For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Seeman | கரும்பு விவசாயி சின்னம் கேட்ட நாம் தமிழர்..!! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!! அதிர்ச்சியில் சீமான்..!!

01:37 PM Mar 04, 2024 IST | 1newsnationuser6
seeman   கரும்பு விவசாயி சின்னம் கேட்ட நாம் தமிழர்     உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு     அதிர்ச்சியில் சீமான்
Advertisement

கரும்பு விவசாயி சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், பாரதிய பிரஜா அய்க்யாதா கட்சி (BPA) என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, நாம் தமிழர் கட்சி தரப்பில், “பல ஆண்டுகளாக பல தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டு இருக்கிறோம். ஆனால், இம்முறை புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் அந்தச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது” என வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், “இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், பிப்ரவரி 13ஆம் தேதி அந்த சின்னத்தை ஒதுக்கியது. இதில், எந்த விதிமீறலும் இல்லை. தாமதம் செய்தது நாம் தமிழர் கட்சியின் தவறு. கரும்பு விவசாயி சின்னத்தை தற்போது பெற்றிருக்கக்கூடிய கட்சி, கடந்தாண்டு டிசம்பர் 17ஆம் தேதி கேட்டிருந்தார்கள். நாம் தமிழர் கட்சி பிப்ரவரி 9-ம் தேதிதான் கேட்டார்கள். இதில், எப்படி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தை குறை கூற முடியும் என வாதத்தை முன்வைத்தனர்.

பின்னர், ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்துடன், குறிப்பிட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ள கட்சிக்குத் தான் நிரந்தர சின்னம் கிடைக்கும். அது இல்லாத நீங்கள் எப்படி கேட்க முடியும் என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், “கரும்பு விவசாயி சின்னம் சுயேட்சை சின்னம். அதை முன்னுரிமை என்ற அடிப்படையில், தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கும். இந்த நடைமுறையை எப்படி மாற்ற முடியும்? நாம் தமிழர் கட்சி என்பது அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருக்கும் பட்சத்தில், எப்படி ஒரு குறிப்பிட்ட சின்னத்தைக் கேட்க முடியும்” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இதையடுத்து, கரும்பு விவசாயி சின்னத்தை கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, நாம் தமிழர் கட்சி தரப்பில், குறைந்தபட்சம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்குவதற்கு பரிசீலனை செய்யவாது உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கரும்பு விவசாயி சின்னத்தை கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் எந்த விரிவான உத்தரவையும் பிறப்பிக்காமல் வழக்கை முடித்து வைத்தது. கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Read More : ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு..!! வழக்கை NIA-விடம் ஒப்படைத்தது மத்திய அரசு..!!

Advertisement