முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Seeman | அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுக்கிறது நாம் தமிழர் கட்சி..!!

It is expected that the vote percentage of the Tamil party will increase significantly in the parliamentary elections.
02:59 PM Jun 04, 2024 IST | Chella
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை கணிசமாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், நாதக எப்போதும் போல தனித்தே களம் கண்டது.

2016 முதல் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 7% வாக்குகளைப் பெற்றது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவதற்கு குறைந்தது 8% வாக்குகள் அவசியம். அதனை இந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்று அங்கீகாரத்தைப் பெற முயன்று வருகின்றனர். ஆனால், விவசாயி சின்னம் இல்லாதது அவர்களுக்கு பாதகமாக பார்க்கப்படும் நிலையில், கொடுத்த மைக் சின்னத்தை ஓரளவுக்கு வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்தது நாம் தமிழர் கட்சி.

பிரச்சார மேடைகளில் பேசிய சீமான், "தமிழ்நாட்டில் மிகவும் வலிமையான கூட்டணி என்றால் அது எங்களுடையதுதான். நாங்கள் மக்களோடு கூட்டணி வைக்கிறோம். வாக்கு சதவீதம் உயரும்" என்று பேசினார். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் கூறும் நிலவரப்படி, கன்னியாகுமரி, நாகை, திருச்சி, புதுச்சேரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தில் இருந்து வருகிறது. பெரும்பான்மையான இடங்களில் 4-வது இடத்தில் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, ஒரு தொகுதியிலும் வெற்றி நிலவரம் காணப்படாவிட்டாலும், வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை கணிசமாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நகர்வுகளை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Read More : BREAKING | திடீர் திருப்பம்..!! மத்தியில் ஆட்சி அமைக்கிறது INDIA கூட்டணி..!! பக்கா பிளான் போட்ட காங்கிரஸ்..!!

Tags :
Loksabha 2024naam tamizhar katchintkSeeman
Advertisement
Next Article