மனைவிக்கு தெரியாமல் விஜயலட்சுமிக்கு வாரிக் கொடுத்த சீமான்..!! துரோகிகள் கையில் தமிழ்நாடா..? பரபரப்பை கிளப்பிய நடிகை..!!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே உள்ள விவகாரம் அனைவரும் அறிந்ததுதான். அவ்வப்போது சீமானை விமர்சித்து விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ”தமிழக மக்களுக்கு ஒரே விஷயத்திற்கு தெளிவு கொடுங்கள். அதன் பிறகு உங்களை முதல்வர் ஆக்கலாமா? வேண்டாமா? என அவர்கள் முடிவு செய்வார்கள். போன வருடம், மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை, நீங்கள் எனது வங்கிக் கணக்கில் ரூ.50,000 ஆயிரம் போட்டுவிட்டீர்கள்.
இது கயல்விழிக்கு தெரிய கூடாது. நாம் தமிழர் கட்சிக்கு தெரியக்கூடாது. மீடியாவுக்கு தெரிய கூடாது. தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியக்கூடாது என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டு, பிறகு இரவும், பகலுமாக என்னிடம் வீடியோ வாங்கிட்டு, டார்ச்சர் செய்தீங்களே, அது எல்லாம் தாங்க முடியாமல் தான் நான் வழக்கு போட்டேன்.
உங்க மனைவி முன் நின்று, பழக்கத்திற்கு இவள் தான் கிடைத்தாளா என எனது மனைவி கேட்டாள் என்று கெக்கே பிக்கென்னு சிரித்தீர்கள். இது தான் உங்களுடைய யோக்யதை. இது எல்லாம் பார்த்த பிறகு, உங்களை முதல்வர் ஆக்க போறாங்களா? ஒன்றும் இல்லை மிஸ்டர் சீமான், உங்களுக்கு முதலில் உண்மை பேசும் யோக்யதையே கிடையாது. உங்கள மாதிரி துரோகிகள் கையில் எல்லாம், தமிழகம் என்னைக்கும் சிக்காது. உங்களது முதல்வர் கனவை எல்லாம் இப்பொழுதே விட்டுவிடுங்கள். என்னுடைய கண்ணீர் விட, எங்க அக்காவோட கண்ணீர் என்னைக்கும் உங்களை சும்மாவிடாது” எனத் தெரிவித்துள்ளார்.
Read More : ”உங்களுக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணனுமா”..? சூர்யாவிடம் திடீரென சண்டை போட்ட நபர்..!! வைரலாகும் வீடியோ..!!