கேரவனில் ரகசிய கேமரா..!! நடிகைகளின் நிர்வாண காட்சி..!! பார்த்து ரசிக்கும் நடிகர்கள்..!!
மலையாள திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் புயலை கிளப்பியுள்ளது. பல முன்னணி நடிகர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால், மலையாள நடிகர் சங்கம் கூண்டோடு கலைந்து விட்டதாகவும், அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமா மிகவும் ஆரோக்கியமாக பல படங்களைக் கொடுத்து வருவதாகப் பாராட்டுகள் குவிந்து வந்தன. ஆனால், இப்படி ஒரு செய்தி வெளியாகி, அந்த திரையுலகின் கொடூர முகத்தை தோளுரித்துக் காட்டியுள்ளது. இது சம்மந்தமாக பல நடிகைகள் அதிர்ச்சி தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை ராதிகாவும் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”நடிகைகளின் கேரவனில் ரகசியக் கேமராக்களைப் பொருத்தி அவர்களின் நிர்வாணக் காட்சிகளை படம் பிடிக்கின்றனர். அதனை நடிகர்கள் படப்பிடிப்புத் தளத்தில் அமர்ந்து ஒன்றாகப் பார்த்து ரசிப்பதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அதனால்தான், நான் ஹோட்டலில் தங்கி ஆடையை மாற்றிக் கொண்டேன்” என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ஃபார்முலா 4 கார் பந்தயம் திடீர் ஒத்திவைப்பு..!! ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!! மீண்டும் எப்போது தொடங்கும்..?