நவராத்திரி இரண்டாம் நாள்!. பூஜை நேரம், அலங்காரம், நைவேத்தியம் விவரம்!.
Navaratri: நாடு முழுவதும் நவராத்திரி விழா நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. எனவே நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை உமா மகேஸ்வரியாக வழிபட்டோம். இதைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் என்ன சிறப்பு என்பதை அறிந்துக்கொள்வோம்.
நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்படும் ஐராப்பு பண்டிகையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri 2023) பண்டிகை, அக்டோபர் 3 ஆம் தேதி அதாவது நேற்று கோலாகலமாக துவங்கியது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள்.
நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும். அதேபோல் கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.
நவராத்திரியின் (Navaratri) ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் இரண்டாம் நாள் (Navratri Day 2) அதாவது அக்டோபர் 4 ஆம் தேதி காலை 06.05 மணி முதல் 11.45 மணி வரையிலான நேரத்திற்குள் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து பூஜையை செய்து முடித்துவிட வேண்டும். அதேபோல் மாலை 6 மணிக்கு மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். முக்கியமாக ராகு காலம், எமகண்டம் நேரத்தில் பூஜை செய்ய வேண்டும்.
இந்த நாளில் வரலட்சுமி நோன்பிற்கு கடைபிடிப்பது போல், நோன்பு கடைபிடித்து, தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம். நவராத்திரியில் மற்றொரு வெள்ளிக்கிழமை அக்டோபர் 11ம் தேதி வருகிறது. ஆனால் அந்த நாளில் சரஸ்வதி பூஜை வருவதால், அப்போது நோம்பு கடைபிடிப்பது கடினமாக இருக்கும் என்பதால் அக்டோபர் 4ம் தேதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ராஜேஸ்வரியாகவோ அல்லது சியாமளா தேவியாகவோ அலங்கரித்து வழிபட வேண்டும். கட்டம் வகையிலான கோலம் போட்டு வழிபட வேண்டும். முல்லை, இலைகளில் மருவு, நெய்வேத்தியம் : புளியோதரை மற்றும் வேர்க்கடலை சுண்டல் படைத்து வழிபட வேண்டும், பாட வேண்டிய ராகம் கல்யாணி, பழங்களில் மாம்பழமும் படைக்க வேண்டும். இந்த நாளில் அன்னைக்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து அலங்கரிக்க வேண்டும். நாமும் மஞ்சள் நிற உடை அணிந்து கொண்டு வழிபாடு செய்யலாம்.
நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாட்டு பலன்கள் : கல்வி, ஞானம், அறிவு, மனதில் தைரியம் கிடைக்கும். மனதில் உள்ள கவலைகள் எதுவாக இருந்தாலும் அதை நீக்கக் கூடியது நவராத்திரியின் இரண்டாம் நாள் வழிபாடு. நினைத்த காரியங்களை நிறைவேற்றி தரக் கூடியவள் அன்னை ராஜ ராஜேஸ்வரி.
Readmore: தொழில் தொடங்க உள்ள 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!