For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அனில் அம்பானிக்கு ஆப்பு வைத்த செபி..!! இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய தடை..!!

Sebi has banned Anil Ambani's company from trading on the Indian stock market.
01:47 PM Aug 23, 2024 IST | Chella
அனில் அம்பானிக்கு ஆப்பு வைத்த செபி     இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய தடை
Advertisement

இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு செபி அமைப்பு தடை விதித்துள்ளது.

Advertisement

முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானியின் நிறுவனம் உள்ளிட்ட 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் செபி அமைப்பு தடை விதித்துள்ளது. மேலும், பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும், இயக்குநராகவோ, நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக் கூடாது என செபி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கூடுதலாக, கட்டுப்பாட்டாளர் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பத்திரங்களை சந்தையில் இருந்து 6 மாதங்களுக்கு தடை செய்து ரூ.6 லட்சம் அபராதம் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. மேலும், ரிலையன்ஸ் யூனிகார்ன் எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட் லிமிடெட், ரிலையன்ஸ் கிளீன்ஜென் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் பிசினஸ் பிராட்காஸ்ட் நியூஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Read More : சூப்பர் வேலை..!! அதிரடியாக அறிவித்த எலான் மஸ்க்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Tags :
Advertisement