அதிரடி..! 2025 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து கார்களிலும் சீட் பெல்ட் அலாரம் கட்டாயம்...!
2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து கார்களிலும் பின் இருக்கைக்கான சீட் பெல்ட் அலாரம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிக்கும். இந்த விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை.
பொதுவாக கார்களில் பயணம் செய்யும் போது ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டியது மத்திய மோட்டார் வாகன விதி 1989-ன் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காரில் பயணம் செய்வோர், சீட் பெல்ட் அணிய தவறும் பட்சத்தில் அதில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ஐ மீறி சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகளை விற்பனை செய்ததற்காக அமேசான், ஃப்ளிப்காட், ஸ்னாப்டீல், ஷாப்க்லூஸ், மீஷோ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து கார்களிலும் பின் இருக்கைக்கான சீட் பெல்ட் அலாரம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிக்கும். இந்த விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.