முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே..!! இது புதுவித மோசடி..!! இந்த வலையில் நீங்களுக்கும் சிக்கிடாதீங்க..!! சைபர் க்ரைம் எச்சரிக்கை..!!

10:53 AM May 15, 2024 IST | Chella
Advertisement

பல ஆன்லைன் செயலிகளில் ஸ்கிராட்ச் கார்டுகள் மூலம் அதிர்ஷ்டப் பரிசுகள், ரிவார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த ஸ்கிராட்ச் கார்டுகளை மோசடி ஆசாமிகளும் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். பெங்களூருவைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், ஸ்கிராட்ச் கார்டு மோசடியில் சிக்கி ரூ.18 லட்சத்தை இழந்துள்ளார். Mesh என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தில் இருந்து அந்தப் பெண் ஒரு ஸ்கிராட்ச் கார்டைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தக் கார்டை சுரண்டியபோது அவர் 15.51 லட்சம் ரூபாய் வென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

பரிசு கிடைக்கப்போவதாக நம்பிய அந்தப் பெண், ஸ்கிராட்ச் கார்டில் வழங்கப்பட்டிருந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் இருந்த நபர் தனது அடையாளச் சான்றுகளைக் கேட்டார். கர்நாடகாவில் லாட்டரிகள் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல்கள் சட்டவிரோதமாக இருப்பதால், லாட்டரித் தொகையில் 4 சதவீதம் கழிக்கப்படும் என்றும் மீதியைப் பெறுவதற்கு 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மோசடி ஆசாமியின் பேச்சை அப்படியே நம்பிய பெண், பல தவணைகளாக ரூ.18 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார். பணத்தை பெற்ற பிறகு அந்த நம்பரில் தொடர்புகொள்ள முடியாமல் போன பிறகு, தான் ஏமாந்துபோனதை உணர்ந்தார். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிக்கு வலைவீசி இருக்கின்றனர்.

ஸ்கிராட்ச் கார்டு மோசடி என்றால் என்ன?

போலியான அல்லது தவறாக வழிநடத்தும் ஸ்கிராட்ச் கார்டில் பரிசு வென்றதாக ஒருவரை ஏமாற்றி பணம் பறிப்பதுதான் ஸ்கிராட்ச் கார்டு மோசடி. போலி ஸ்கிராட்ச் கார்டுகளில் பணத்தை வென்றதாகக் கூறி, ஒரு கட்டணத்தைச் செலுத்தி பரிசை பெற்றுக்கொள்ளச் சொல்வார்கள். தனிப்பட்ட தகவலை வழங்குமாறும் வற்புறுத்துவார்கள். ஆனால், சொன்னபடி பரிசத்தொகை எதுவும் ஒருபோதும் கிடைக்காது. இந்த ஸ்கிராட்ச் கார்டை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்புவார்கள். செயலாக்கக் கட்டணம் என்றும் வரி என்றும் ஒரு தொகையை முன்கூட்டியே செலுத்தினால் தான் பணம் கிடைக்கும் என்று கூறுவார்கள். அதை நம்பி பணத்தை அனுப்பினால், அந்தத் தொகையை அப்படியே இழக்க நேரிடும்.

Read More : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

Advertisement
Next Article