கொளுத்தும் வெயில்… வாகன ஓட்டிகளுக்காக 'பசுமை பந்தல்' திட்டம்..!!
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் சென்னையில் உள்ள சிக்னல்களில் "பசுமை பந்தல்" அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெளியே மக்கள் நடமாட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது. இதில் அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிலும் இருசக்கர வாகனங்களில் செல்லாத முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் சிக்னல் ஒரு தலையாய பிரச்னையாக உள்ளது. நாம் சாலை விதிகளை மதிக்க வேண்டும். சிக்னலில் நின்று செல்ல வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சிக்னலில் நிற்க முடியாத சூழல் இருக்கிறது. இதில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் பசுமை பந்தல் அமைக்கும் பணியை பல்வேறு மாநகராட்சிகள் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில், சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் முதற்கட்டமாக ஈ.வெ.ரா பெரியார் சாலை, ராஜா முத்தையா சாலை சந்திப்பு, அண்ணா நகர் செகண்ட் அவென்யூ ரவுண்டானா, நியூ ஆவடி சாலை மூன்றாவது அவுன்யு, கீழ்பாக்கம், சேத்துபட்டு போக்குவரத்து சிக்னல், அடையாறு எல்.பி சாலை மேற்கு அவென்யூ, திருவான்மியூர் சந்திப்பு, அடையார் சந்திப்பு, ஓ.எம்.ஆர் சந்திப்பு ஆகிய இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட உள்ளது. இந்த செய்தி வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More: Haryana | கவிழ்கிறதா பாஜக ஆட்சி.? ஆதரவை வாபஸ் பெற்ற சுயேட்சை எம்எல்ஏக்கள்.!! பரபரப்பான தகவல்.!!