கொளுத்தும் வெயில்..!! கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஆபத்து..!! எச்சரிக்கும் மகப்பேறு மருத்துவர்..!!
தமிழ்நாட்டில் வெயில் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மே மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பநிலை கடுமையாக அதிகரித்து வருகிறது இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், சில மாவட்டங்களில் 115 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பரவலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் இதுவரை மூன்று உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. வெயில் காலத்தில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் அவர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், வெப்பச்சலனம் குறித்து பேசியுள்ள மகப்பேறு மருத்துவ ஆலோசகர் டாக்டர் அனுசுயா, ”இந்த கோடையில், நம் மாநிலத்தில், கடும் வெப்ப நிலை நிலவி வருகிறது. கர்ப்பிணிகள் மற்றும் பிறந்த குழந்தைகள், உடல் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். கர்ப்பிணிகள், பருத்தியினாலான மட்டுமே அணிய வேண்டும்.
குறிப்பாக அதிக வெப்பநிலை நேரங்களில் கர்ப்பிணிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக தோல் பிரச்சனைகள் மற்றும் நீரிழப்பு ஏற்படுத்தும். இதனால், குழந்தையை ஏசி அல்லது ஏர் கூலர் உள்ள அறைகளில் வைத்து பராமரிக்க வேண்டும். அல்லது குளிர்ந்த இடங்களில் குழந்தை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இளம் குழந்தைகளைப் பொறுத்தவரை, அதிக வெப்பம் உள்ள நேரங்களில் திறந்தவெளியில் விளையாடுவதைத் தவிர்ப்பது அவசியம்” என எச்சரித்துள்ளார்.
Read More : ”கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல”..!! ரூ.3,454 கோடி ஒதுக்கிய மத்திய அரசு வலுக்கும் கண்டனம்..!!