முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கொளுத்தும் கோடை வெயில்..!! மின் நுகர்வில் புதிய உச்சம் தொட்ட தமிழ்நாடு..!!

04:53 PM Apr 05, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 440.89 மில்லியன் அலகுகளாக நேற்று பதிவாகியுள்ளது.

Advertisement

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் தினசரி மின்நுகா்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தின் தினசரி மின் நுகா்வு மாா்ச் 29ஆம் தேதி 426.44 மில்லியன் யூனிட்-ஆக இருந்து வந்த நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு உயா்ந்தது.

தற்போது இந்த மின்நுகர்வு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 440.89 மில்லியன் அலகுகளாக நேற்று பதிவாகியுள்ளது. அதாவது, 44.08 கோடி யூனிட் மின்சாரத்தை தமிழ்நாடு நுகர்ந்துள்ளது.

இது முன்னர் (03.04.2024) தொட்ட அளவான 19413 மெகா வாட் (தேவை) மற்றும் 435.85 மில்லியன் யூனிட் (பயன்பாடு) விட அதிகம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அளவிலான மிக அதிக மின் தேவையையும் சமாளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பெரும் தெரிவித்துள்ளார்.

Read More : திடீர் திருப்பம்..!! பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பு..? NIA கிடுக்குப்பிடி விசாரணை..!!

Advertisement
Next Article