For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொளுத்தும் கோடை வெயில்..!! குடும்பங்களுடன் படையெடுக்கும் மக்கள்..!! எங்கு போறாங்க தெரியுமா..?

11:33 AM Apr 25, 2024 IST | Chella
கொளுத்தும் கோடை வெயில்     குடும்பங்களுடன் படையெடுக்கும் மக்கள்     எங்கு போறாங்க தெரியுமா
Advertisement

தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காலநிலை மற்றம் காரணமாக தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெரும் மற்றம் ஏற்பட்டு வருகிறது. கோடையில் அதிக வெயிலும் மழைக்காலத்தில் அதிக மழைப்பொழிவும் பதிவாகின்றன. தற்போது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் கிளப்பிய அனலை விட கோடை வெயிலின் அனல் மக்களை ஓடி ஒளிய வைத்துள்ளது. தகிக்கும் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள ஓடிவந்த மக்களை நாடி வந்து குளிர்விக்கிறாள் மலைகளின் அரசி உதகை. உதகை தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மலர் கண்காட்சிக்காக அங்குள்ள கண்ணாடி மாளிகையில் மலர் செடிகளை அடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் முதல் முறையாக 2 அரை டன் வண்ண கூழாங்கல் கற்களை கொண்டு வன விலங்குகளின் உருவங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

கடல் மட்டத்திலிருந்து 2240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உதகை முழுவதும் குளுமையான காற்றோடு இதமான சூழல் நிலவுவதால், பல ஆயிரம் பேர் இங்கு படையெடுத்து வருகின்றனர். இதனால், தற்போதே உதகையில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. உதகையில் வந்து குவியும் சுற்றுலா பயணிகளுக்காக தாவரவியல் பூங்கா மட்டுமல்லாது, ரோஜா பூங்காவிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு மட்டுமல்லாது, சர்வதேச கோடை வாழிடமாக உள்ள உதகையை மேலும் தூய்மையாக வைத்து கொள்வது பயணிகளின் கடமை. அதே நேரம் இங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Read More : மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! தமிழ்நாட்டில் 100% கோதுமையால் தயாரான பீர்..!! விலை எவ்வளவு தெரியுமா..?

Advertisement