Warning: தமிழகத்தில் ஊரடங்கா?... சுட்டெரிக்கும் வெயில்!… பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
Warning: வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கும் வெயில் மே முழுவதும் வாட்டி வதைக்க தொடங்கும். ஆனால் இந்த முறை மார்ச் மாதமே வெயில் வாட்ட தொடங்கிவிட்டது. சரியாக சொல்வதெனில் பிப்ரவரி இறுதியிலிருந்தே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. தென்னிந்தியாவும் சரி, வட இந்தியாவும் சரி ஒட்டு மொத்த நாடே வெயிலால் கடுமையான அவஸ்தையை எதிர்கொண்டது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சுமார் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் வாட்டுகிறது.
இது மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிய அளவில் பாதித்தது. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்வோர் தொடங்கி, அன்றாட கூலி தொழில் செய்பவர்கள் உட்பட பலர் பாதிக்கப்படுகின்றனர். பலர் வெயிலால் ஏற்படும் அக்கி, அம்மை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை. தேசிய சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு போன்றவற்றை தினசரி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" "மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மின் வாரியத்துடன் ஆலோசனை நடத்தி மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டம். குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வெளியில் வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெயிலில் பணிபுரிவோர் தினசரி 5 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Readmore: Miss World: நடப்பாண்டின் உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசு பெண்!