For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Power: சுட்டெரிக்கும் வெயில்!… இதுவரை இல்லாத அளவுக்கு உச்சமடைந்த மின் நுகர்வு!… 40 கோடி யூனிட்டை தாண்டியது!

05:50 AM Mar 09, 2024 IST | 1newsnationuser3
power  சுட்டெரிக்கும் வெயில் … இதுவரை இல்லாத அளவுக்கு உச்சமடைந்த மின் நுகர்வு … 40 கோடி யூனிட்டை தாண்டியது
Advertisement

Power: தமிழகத்தில் வாட்டிவதைத்து வரும் கோடை வெயில் காரணமாக தினசரி மின் நுகர்வு, 40 கோடி யூனிட்களை தாண்டியுள்ளது.

Advertisement

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தினசரி மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்ச் 1-ம் தேதி தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 383.52 மில்லியன் யூனிட். இதில் மத்திய கிரிட் ( மின் கட்டமைப்பு ) மூலம் 209.52 மில்லியன் யூனிட், அனல் மின் நிலையத்தால் 94.75, ஹைட்ரோ திட்டத்தில் 7.11, காஸ் 5.55, காற்றாலை 22.26, சூரிய ஒளி 32.2, பையோ திட்டத்தில் 12.14 மில்லியன் யூனிட் வீதம் மின் உற்பத்தி கிடைத்தது.

அந்தவகையில், தமிழ்நாடு மின் வாரியம் கோடை கால மின் தேவையை கணக்கில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. இருப்பினும், தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. மாநிலத்தின் தினசரி மின் நுகர்வு சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ளன. ஆனால், இது, கோடை காலத்தில் அதிகரிக்கிறது. அதன்படி, 2023 ஏப்., 20ல் மின் நுகர்வு, 42.37 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.

தற்போது, வெயில் சுட்டெரிப்பதால் தினசரி மின் நுகர்வு, 35 கோடி யூனிட்களை தாண்டியது. இது, நேற்று முன்தினம், 40.20 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இந்தாண்டில் முதல் முறையாக மின் நுகர்வு, 40 கோடி யூனிட்களை தாண்டியுள்ளது.

Readmore: மக்களே…! ரேஷன் அட்டைதாரர் கவனத்திற்கு… இன்று காலை 10 முதல் 5 மணி வரை…! மிஸ் பண்ணிடாதீங்க…!

Tags :
Advertisement