50,000 ஆண்டுகள் பழமையான குழந்தை மாமத் சடலம் கண்டுபிடிப்பு..!! - ரஷ்ய விஞ்ஞானிகள் அசத்தல்
ரஷ்ய விஞ்ஞானிகள் சைபீரியாவின் தொலைதூர யாகுடியா பகுதியில் 50,000 ஆண்டுகள் பழமையான குழந்தை மாமத்தின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு "யானா" என்று பெயரிடப்பட்டது. 100 கிலோவுக்கு மேல் எடையும், 120 செ.மீ உயரமும், 200 செ.மீ நீளமும் கொண்ட யானா, இறக்கும் போது சுமார் ஒரு வயது இருக்கும் என கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பெர்மாஃப்ரோஸ்ட் பள்ளமான படகைக்கா பள்ளத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த கண்டுபிடிப்புக்கு , உலகில் ஆறு மட்டுமே காணப்பட்டன.. ரஷ்யாவில் ஐந்து மற்றும் கனடாவில் ஒன்று. Lazarev Mammoth அருங்காட்சியக ஆய்வகத்தின் தலைவரான மாக்ஸிம் செர்பசோவ் கூறுகையில், "மாமத்தின் பகுதிகள் வேட்டையாடுபவர்களால் உண்ணப்பட்டாலும், தலை குறிப்பிடத்தக்க வகையில் நன்கு பாதுகாக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டார். யானாவின் எச்சங்கள் இப்போது யாகுட்ஸ்கில் உள்ள வடகிழக்கு ஃபெடரல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன, அங்கு விஞ்ஞானிகள் அதன் மரண நேரத்தை தீர்மானிக்க சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம், விஞ்ஞானிகள், 32,000 ஆண்டுகளுக்கு குறைவான வயதுடையது என நம்பப்படும் சேபர்-டூத் பூனையின் பகுதியளவு மம்மி செய்யப்பட்ட உடலை வெளியிட்டனர், மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில், 44,000 ஆண்டுகள் பழமையான ஓநாயின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.