For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெரிய ஆபத்து.. எல்லாரும் அழியப் போறாங்களா? பூமியை நெருங்கும் 'அபோபிஸ்' விண்கல்.. NASA விடுத்த எச்சரிக்கை..!!

Scientists have warned that the meteor 'Apophis', which is the most threatening to the earth, will hit the earth soon. They also said that if that happens, the earth will be destroyed.
04:29 PM Sep 05, 2024 IST | Mari Thangam
பெரிய ஆபத்து   எல்லாரும் அழியப் போறாங்களா  பூமியை நெருங்கும்  அபோபிஸ்  விண்கல்   nasa விடுத்த எச்சரிக்கை
Advertisement

பூமிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் 'அபோபிஸ்' எனும் விண்கல், விரைவில் பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அப்படி நடந்தால், பூமி அழிந்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.

Advertisement

பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனை சுற்றிவருவது போன்றே, சூரிய குடும்பத்தின் கோள்கள், சிறுகோள்களுக்கு அப்பால் எண்ணற்ற விண்கற்களும் தமக்கான சுற்றுவட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில் சில பூமிக்கு நெருக்கமாக கடக்கையில் அவை பூமியின் இருப்புக்கு பீதி தரவும் கூடும். 2024-ம் ஆண்டின் தொடக்கம் முதலே பல்வேறு விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. இந்த விண்கற்கள் பூமிக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன.. இப்படி இருக்கையில் பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 'அபோபிஸ்' (God of chaos) எனும் விண்கல், விரைவில் பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பூமிக்கு நெருக்கமாக பல விண்கற்கள் இருக்கின்றன. இருப்பினும் இவை அனைத்தும் பூமியை தாக்கிவிடாது. குறிப்பிட்ட சில கற்கள் மட்டுமே ஆபத்தானவையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 0 என்கிற அளவில் வைக்கப்பட்டிருக்கும் கற்கள் பூமியை தாக்குவதற்கு வாய்ப்பு கிடையாது. இதே 10 என்கிற அளவில் வைக்கப்பட்டிருக்கும் கல், நிச்சயம் பூமியை தாக்கும். இந்த அளவீட்டில் 'அபோபிஸ்' எனும் விண்கல் 4வது இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

இது பூமியை தாக்கினால், 3 கி.மீ ஆழத்தில், 10 கி.மீ அகலத்திற்கு ஒரு பெரிய பளத்தை உருவாக்கும். இந்த கல் விழுந்த இடத்தை சுற்றி 320 கி.மீ பரப்பளவுக்கு 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவாகும். இந்த பரப்பளில் ஒரு கட்டிடம் கூட மிஞ்சாது. இந்த தாக்கத்தால் ஏற்படும் புகையானது வானத்தை சுற்றி படரும். இதனால் சூரிய ஒளி கூட பூமிக்குள் வரமுடியாது. எனுவே செயற்கையான குளிர்காலம் உருவாகும். லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள். கோடிக்கணக்கானோர் படுகாயமடைவார்கள். பூமியின் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.

Read more ; ஹரியானா தேர்தல்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரஞ்சித் சிங் சவுதாலா..!! என்ன விவகாரம்?

Tags :
Advertisement