For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

3 விஞ்ஞானிகளுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!! யார் அவர்கள்? கண்டுபிடிப்புகள் என்ன?

Nobel Prize in Chemistry 2024 awarded to David Baker, along with Demis Hassabis and John M. Jumper
04:08 PM Oct 09, 2024 IST | Mari Thangam
3 விஞ்ஞானிகளுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு     யார் அவர்கள்  கண்டுபிடிப்புகள் என்ன
Advertisement

இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1901-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசை நிறுவியவா் ஸ்வீடனைச் சோ்ந்த ஆல்பிரட் நோபல். வேதியியல், பொறியியலில் நிபுணரான இவா், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தாா்.

Advertisement

தனது கண்டுபிடிப்பின் மூலம் பெரும் செல்வந்தரான இவா் அறிவியல் கண்டுபிடிப்புகளை கெளரவிக்கும் வகையில் நோபல் பரிசை நிறுவினாா். அவரது நினைவுதினமான டிசம்பா் 10-ஆம் தேதி பரிசு வழங்கப்படும். அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான வேதியியல் துறை சார் நோபல் பரிசு 3 பேருக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. முதல் பாதியை டேவிட் பேக்கருக்கு "கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக" வழங்கவும், மீதி பாதியை டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்ப்பர் ஆகியோருக்கு "புரத அமைப்புக் கணிப்புக்காக" வழங்கவும் நோபல் அகாடமி முடிவு செய்துள்ளது.

தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி (10 லட்சம் டாலா்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. முன்னதாக 2024ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், வியாழக் கிழமை அன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசும் வெள்ளி அன்று அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல அக்டோபர் 14ஆம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; ஹரியானா தோல்வி.. டெல்லி தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி கிடையாது..!! – ஆம் ஆத்மி முடிவு

Tags :
Advertisement