முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்று பூமியை நெருங்கும் 3 விண்கற்கள்.!! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மொத்தமும் காலி.. நாசா வார்னிங்

Scientists are saying that meteorites are a threat to the earth. In this case, NASA has warned that 3 meteors will pass close to the earth today
04:29 PM Sep 04, 2024 IST | Mari Thangam
Advertisement

பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனை சுற்றிவருவது போன்றே, சூரிய குடும்பத்தின் கோள்கள், சிறுகோள்களுக்கு அப்பால் எண்ணற்ற விண்கற்களும் தமக்கான சுற்றுவட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில் சில பூமிக்கு நெருக்கமாக கடக்கையில் அவை பூமியின் இருப்புக்கு பீதி தரவும் கூடும். 2024-ம் ஆண்டின் தொடக்கம் முதலே பல்வேறு விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. இந்த விண்கற்கள் பூமிக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

Advertisement

ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. அப்படி ஒரு ஆய்வுதான் நேற்று பூமிக்கு அருகே விண்கற்கள் மூன்று கடந்து செல்ல இருப்பதை கண்டு பிடித்திருக்கிறது.

2024 QU, 2024 QE2 மற்றும் 2024 RB எனும் பெயர் கொண்ட விண்கற்கள்தான் இன்று பூமியை கடந்து செல்ல இருக்கிறது. இதில் '2024 QU' எனும் விண்கல்தான் மிகப் பெரியது. சுமார் 120 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், பூமியை 28 லட்சம் கி.மீ தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது. இது ரொம்ப தூரமாக தெரியலாம். ஆனால், பூமிக்கும் அடுத்து உள்ள கோளுக்கும் இடைப்பட்ட தூரத்தை விட இது குறைவுதான்.

விண்கல்லின் பாதையில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட, அது பூமிக்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்த விண்கல் பூமியில் மோதினால், 10 அணு குண்டு ஒரே நேரத்தில் வெடித்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ, அதை இது ஏற்படுத்தும். மட்டுமல்லாது இந்த விண்கல் விழுந்த இடத்தில் 2 கி.மீ விட்டத்திலும், 660 மீ ஆழத்திலும் மிகப்பெரிய பள்ளம் ஏற்படும்.

விண்கல் விழுந்த இடத்திலிருந்து 200 கி.மீ வரை ரிக்டர் 7 அளவில் நிலநடுக்கம் ஏற்படும். மட்டுமல்லாது இது விழுந்த இடத்தை சுற்றி 10 கி.மீக்கு எந்த கட்டிடங்களும் இருக்காது. ஒருவேளை இது கடலில் விழுந்தால், விழுந்த இடத்திலிருந்து 500 கி.மீ பரப்பளவு உள்ள பகுதிகள் கடுமையான சுனாமியால் பாதிக்கப்படும். இந்த விண்கல்லை தவிர மற்ற இரண்டு விண்கல்லும் 30-36 அடி அளவில்தான் இருக்கும். இந்த இரண்டு விண்கற்கள் பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Read more ; திருப்பதிக்கு போறீங்களா? இந்த நாளில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை..!!

Tags :
earthnasascientist
Advertisement
Next Article