For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை…" வாசலில் சாணம் தெளித்து கோலம் போடுவதன் அறிவியல் பின்னணி.!

06:33 AM Nov 24, 2023 IST | 1newsnationuser4
 முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை…  வாசலில் சாணம் தெளித்து கோலம் போடுவதன் அறிவியல் பின்னணி
Advertisement

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்ற வாசகம் தற்போதைய இன்டர்நெட் காலத்தில் மீம்ஸ் ஆக்கப்பட்டு நகைப்பிற்குரிய சொல்லாடலாக ஆக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மையிலேயே அந்த வார்த்தைக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு விஷயங்களுக்குப் பின்பும் சாஸ்திர மற்றும் அறிவியல் ரீதியான உண்மை இருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால் அதில் இருக்கும் உண்மைகள் நமக்கு புரியும்.

Advertisement

பண்டைய காலம் தொட்டு இன்று வரை கிராமப்புறங்களில் இருக்கும் பெரும்பாலான வீடுகளில் வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போடும் பழக்கம் இருந்து வருகிறது. இது சாதாரணமான ஒரு சம்பிரதாய பழக்கமாக இல்லாமல் இதற்குப் பின் இருக்கும் அறிவியலையும் இப்பதிவில் பார்க்கலாம். பண்டைய காலங்களில் வீட்டு வாசலில் கோலம் போடுவதற்கு அரிசி மாவை பயன்படுத்தினார்கள். வீட்டு வாசலில் கோலம் போடுவது கடவுளுக்கு செய்யும் மரியாதை மற்றும் வீட்டை அழகாக வைத்திருக்கும் ஒரு செயல் என்றாலும் அதற்குப் பின்னால் ஒரு அறிவியல் உண்மையும் இருக்கிறது.

அதாவது அரிசி மாவினால் கோலம் போடும்போதுஈ, எறும்பு போன்ற வாயில்லாத ஜீவராசிகளும் அவற்றை சாப்பிட்டு உயிர் வாழும் என்ற உயரிய பண்பினால் தான் என்ற அறிவியல் உண்மை இருக்கிறது. இதே போன்று தான் சாணம் தெளித்து கோலம் போடுவதற்கு பின்பும் ஒரு அறிவியல் உண்மை உள்ளது. அதாவது பண்டைய காலத்தில் பெரும்பாலான மக்கள் காலணிகள் அணிவதில்லை. வெறும் காலுடனே எல்லா இடங்களுக்கும் சுற்றி வந்தார்கள். இதனால் அவர்களது காலில் பலவிதமான கிருமிகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

இதனால் ஒருவர் வீட்டின் வாசலில் சாணம் தெளித்து இருக்கும்போது சாணத்தில் இருக்கக்கூடிய கிருமி எதிர்ப்பு பண்பு அவரது கால்களில் இருக்கக்கூடிய கிருமிகளை அகற்றி விடும். இதன் காரணமாக அவர்களது கால்களின் மூலம் கிருமிகள் வீட்டிற்குள் பரவாது. இதற்காகத்தான் வீட்டு வாசலில் சாணம் தெளித்து பின்னர் கோலம் போடும் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள் முன்னோர்கள். தாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் சாஸ்திரம் மற்றும் அறிவியல் அடிப்படையிலான உண்மைகளை கொண்டே வாழ்ந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

Tags :
Advertisement