முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிசம்பர் 11ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு..!! இது ரொம்ப முக்கியம்..!! பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு..!!

07:29 AM Dec 08, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளை டிசம்பர் 11ஆம் தேதி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Advertisement

டிசம்பர் 11ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால், இன்று தலைமையாசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு சென்று பார்வையிட வேண்டும் என்றும், பள்ளி வளாகத்தை முழுமையாகத் தூய்மை செய்து உடைந்த பொருட்கள், கட்டிட இடிபாடுகளை அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, பள்ளி வளாகத்தை முழுமையாகத் தூய்மைச் செய்ய வேண்டும்.

முட்புதர்களை அகற்ற வேண்டும். பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருந்ததால், மழையால் வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றைப் பூட்டி மாணவர்கள் அந்த அறைக்குள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். பள்ளி சுற்றுச்சுவர்களில் இருந்து 20 அடி தொலைவு வரை யாரும் செல்லாத படி தடுப்புகள் அமைக்க வேண்டும். நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கித் தருவதை உறுதி செய்ய வேண்டும். இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் இருப்பின், அவற்றின் அருகே செல்லாதபடி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்” என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Tags :
சென்னைபள்ளிகள் திறப்புபள்ளிக்கல்வித்துறைமாணவர்கள்
Advertisement
Next Article