முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

#Breaking: திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும்...! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!

Schools will be opened tomorrow as planned - Education department action announcement..!
08:21 PM Jan 01, 2025 IST | Kathir
Advertisement

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் டிசம்பர் 23ஆம் தேதியுடன் அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து, டிசம்பர் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. 9 நாட்கள் விடுமுறை அடுத்து ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பல மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement

இந்நிலையில், 9 நாட்கள் விடுமுறை முடிந்து, நாளை (ஜனவரி 2) அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில், விடுமுறை நீட்டிக்கப்படுமா என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பார்த்திருந்தனர். அதாவது நாளைய தினம் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில், இரண்டு நாட்களுக்கு மட்டுமே பள்ளிகள் இயங்கும். பிறகு சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும். எனவே, சொந்த ஊர் சென்றுள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு ஜனவரி 6ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அரையாண்டு விடுமுறைக்கு பின், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும், விடுமுறை நீட்டிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நீட்டிப்பு என்ற தகவலையும் பள்ளிக்கல்வித்துறை மறுத்துள்ளது.

Read More: டியூசனுக்கு படிக்க வந்த சிறுவன்… டீச்சரின் தங்கையால் ஏற்பட்ட விபரீதம்..

Tags :
tn school openதிட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும்...நாளை பள்ளிகள் திறக்கப்படும்
Advertisement
Next Article