முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகமே விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு...! ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

05:30 AM Jan 02, 2024 IST | 1newsnationuser2
Advertisement

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, டிச.23 முதல் அரையாண்டு விடுமுறை தொடங்கியது. ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

Advertisement

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உரிய சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை வசதிகளை உறுதி செய்ய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டடங்கள் இருந்தால் அவற்றில் மாணவர்களை அமர வைக்கக் கூடாது. பாதுகாப்பான இடங்களில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்த வேண்டும்.

இதுதொடர்பாக போதிய அறிவுறுத்தல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்புகள், தென் தமிழகத்தில் அதி கனமழை பாதிப்புகள் ஆகியவற்றால் பல்வேறு பள்ளிகள் பாதிக்கப்பட்டன. இவற்றை சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி, 6 முதல் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
anbil maheshEdu departmentschoolSCHOOL REOPEN
Advertisement
Next Article