முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகமே..! காலாண்டு விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறப்பு...!

Schools are re-opening today after the quarter break.
06:06 AM Oct 07, 2024 IST | Vignesh
Advertisement

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்படுகின்றன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவ தேர்வுகள் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28-ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது.

Advertisement

விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்படுகின்றன. இதையொட்டி, பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள், இதர பராமரிப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்களை முதல் நாளான இன்றேமாணவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். 2-ம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பாட நூல்களையும் உடனே வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

பருவ மழை தொடங்கவுள்ளதை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி அந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Edu departmentschoolSCHOOL REOPENtn government
Advertisement
Next Article