முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கவனம்...! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு...! ஆனால் ஒன் கண்டிஷன்...

06:00 AM Dec 11, 2023 IST | 1newsnationuser2
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. இதையொட்டி முழுவீச்சில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.

Advertisement

பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் அகற்றப்பட வேண்டும். அனைத்து பொதுகழிப்பறைகளும், சமுதாய கழிப்பறைகளும் சுகாதாரமான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தெருவிளக்குகள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதே போல, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று மேலாண்மை தொடர்பாக, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்து ஒருங்கிணைத்தல். குடிநீர் விநியோக நிலையங்கள் மற்றும் கழிவுநீரகற்று நிலையங்களை கணக்கெடுத்து, அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகம், சீருடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் 13-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Tags :
CheñnaiDocumentkancheepuramrainschool
Advertisement
Next Article