ஆசிரியர் செய்யும் காரியமா இது? 3ம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் செய்த காரியம்..
பள்ளிப்பட்டு பேரூராட்சி ஆஞ்சநேய நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சிறுமி ஒருவர் 3ம் வகுப்பு படித்து வருகிறார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 59 வயதான செங்கல்வராயன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து திருத்தணி மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் போலீசார் அவரை கடந்த மாதம் 18ம் தேதி போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
மேலும், அந்தப் பள்ளியின் உதவி ஆசிரியையான ரமணி என்பவர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறுமி தனக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியும் அவர் கண்டுகொள்ளாமல் உண்மையை மறைத்துள்ளார். மேலும், அவர் தலைமை ஆசிரியரின் பாலியல் பலாத்காரத்தை மூடி மறைக்க உடந்தையாக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் ஒரு மாதத்திற்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உதவி ஆசிரியை ரமணி மீது போக்சோ சட்டத்தில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
Read more: “புடைவையை தூக்கி கட்டும்மா… பார்க்க கஷ்டமா இருக்கு” தொகுப்பாளினிக்கு பிரபல நடிகர் கொடுத்த அட்வைஸ்..