பள்ளி வளாகத்தில், மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்!!! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஓமசேரி பகுதியை சேர்ந்தவர் 48 வயதான சுதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவிகள் 2 பேருக்கு ஆசிரியர் சுதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போன மாணவிகள் 2 பேரும், சம்பவம் குறித்து தங்களின் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர், இது தொடர்பாக தாமரைசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆசிரியர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் சுதனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கு முன்னதாக, ஆசிரியர் சுதன் வேலை பார்த்து வந்த சில பள்ளி மாணவர்களை தாக்கியதாகவும், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக, ஆசிரியர் சுதன் மீது 2 காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.