6-ஆம் வகுப்பு மாணவி மீது ஆசிரியருக்கு ஏற்பட்ட ஆசை; ஆசையை அடக்க முடியாமல், பள்ளி வளாகத்தில் அவர் செய்த காரியத்தால் பரபரப்பு..
திருப்பூா் மாவட்டம், ஊதியூா் பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில், 54 வயதான சிவகுமார் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவா் அதே பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார். இதையடுத்து, அவர் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்குச் சென்ற போது, தனக்கு நடந்த கொடுமைகளை குறித்து அவரது உறவினா்களிடம் கூறியுள்ளார்.
மாணவி கூறியதை கேட்டு, அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில், காங்கயம் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பள்ளியில் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் சிவகுமாரை போக்ஸோவில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: எச்சரிக்கை!!! பிரபல தீம் பார்க்கில், 2 பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்.