“ஒழுங்கா நான் சொன்னதை பண்ணு, இல்லேன்னா mark கம்மி பண்ணிடுவேன்” ஆசிரியருக்கு பயந்து மாணவி செய்த காரியம்..
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயதான முகமது சனேகா. இவர் தனியார் பள்ளி ஒன்றில், கணித ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த ஆசிரியர், மாணவியிடம் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல், தனக்கு வீடியோ கால் செய்ய வேண்டும் என்று கட்டாயபடுத்தி உள்ளார். இதற்கு முதலில் மாணவி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தான் சொன்னதை செய்யாவிட்டால் தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என்று கூறி, மாணவியை மிரட்டியுள்ளார்.
இதனால் பதறிப்போன மாணவி, ஆசிரியர் சொன்னப்படி, போட்டோ அனுப்பியதோடு வீடியோ காலும் செய்துள்ளார். மானவியின் பயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆசிரியர், தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, ஒரு கட்டத்தில் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். தங்களின் மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியரே இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.