For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

School | ஷாக்கிங்..!! அரசுப் பள்ளிகளுக்கான நிதியை நிறுத்தியது மத்திய அரசு..!! தமிழ்நாடு அரசுக்கு சிக்கல்..!!

08:17 AM Mar 01, 2024 IST | 1newsnationuser6
school   ஷாக்கிங்     அரசுப் பள்ளிகளுக்கான நிதியை நிறுத்தியது மத்திய அரசு     தமிழ்நாடு அரசுக்கு சிக்கல்
Advertisement

பள்ளிகள் வளர்ச்சிப் பணிகளுக்கான ரூ.1,045 கோடி நிதியுதவியை மத்திய அரசு திடீரென நிறுத்தியுள்ளதால், தமிழ்நாட்டிற்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வளர்ச்சி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த நிதியை பெற மத்திய அரசின் விரிவான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். அதன்படி, நடப்பு நிதியாண்டில் (2023-24) ரூ.2,090 கோடி நிதி வேண்டுமென மத்திய அரசிடம் தமிழ்நாடு கோரிக்கை விடுத்தது.

அதில், இதுவரை ரூ.1,045 கோடி நிதி கிடைத்துள்ளது. மீதமுள்ள ரூ.1,045 கோடி நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நிதியை வழங்கமுடியாது என மத்திய அரசு கைவிரித்துவிட்டதால் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், ”பிஎம்ஸ்ரீ பள்ளி எனும் திட்டத்தை மத்திய அரசு 2022ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்கள் என பள்ளிகளில் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இடம்பெறும்.

இதில் அனைத்து மாநிலங்களும் இணைய வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியது. அதையேற்று இதுவரை 29 மாநிலங்கள் சேர்ந்துள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்கம், டெல்லி, கேரளா உட்பட சில மாநிலங்கள் திட்டத்தில் இணையவில்லை. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இத்திட்டம் வருவதால் தமிழ்நாடு அதை ஏற்கவில்லை. இந்நிலையில், பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கான நிதியுதவியை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதனால் இந்தாண்டு ரூ.1,045 கோடி நிலுவை நிதியானது நமக்கு கிடைக்காது. மேலும், தமிழக அரசுக்கும் கூடுதல் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்றனர்.

Read More : Kilambakkam | இனி ரூ.40 இருந்தால் போதும்..!! கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! புதிய வசதி அறிமுகம்..!!

Advertisement