விடுதியில் தங்கி இருக்கும் மாணவியிடம், ஆசிரியர் செய்த காரியம்.. பெற்றோருடன் சேர்ந்து மாணவி கொடுத்த பதிலடி..
மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மூர்த்தி என்ற நபர், இந்தப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார். அந்தக் கிராமத்தினர் சார்பாக, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் இவர் தற்காலிக ஆசிரியராக தேர்ந்து எடுக்கபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளி விடுதியில் தங்கிப் பயிலும் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் அளித்த புகார் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த சிறுமி, தனது ஆசிரியர் மூர்த்தி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக உகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் உள்ளிட்டவற்றில் தனது தாய் தந்தையுடன் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், மாணவியிடம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மூர்த்தி மீது போக்சோ சட்டப்பிரிவு மற்றும் கொலை மிரட்டல் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.