முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாய் பெஸ்ட்டி வீட்டிற்க்கு தனியாக சென்ற சிறுமி; 3 நாளில், 7 பேர் செய்த காரியம்..

05:34 PM Nov 22, 2024 IST | Saranya
Advertisement

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் வயிற்று பிழைப்புக்காக நீலகிரி மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு 16 வயது மகள் ஒருவர் உள்ளார். இவர் அருகில் உள்ள பள்ளியில், 10 -ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 - ம் தேதி, மாணவியை காணவில்லை. எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெறோர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மூன்று நாள்கள் கழித்து மாணவி அவராகவே வீடு திரும்பியுள்ளார்.

Advertisement

இதையடுத்து, வீடு திரும்பிய மாணவியிடம் நடந்ததை குறித்து பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது அவர், முகநூல் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் அவரது வீட்டிற்கு அழைத்துச் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார், மாணவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் 7 பேர் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

சம்பவம் குறித்து தெரிவித்த மகளிர் காவல்துறையினர், "சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காஜா, ஊட்டியைச் சேர்ந்த ஹரிஷ், இடுஹட்டி பகுதியைச் சேர்ந்த பிரவீன், பெந்தட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், அஜீத் உட்பட 7 பேரில் 4 பேரைக் கைதுசெய்து, 3 பேரைத் தேடி வருகிறோம் என்றனர். மேலும், இவர்கள் அனைவரும் சிறுமியிடம் செல்போனில் நண்பர்களாக பழகி தகாத செயல்களில் ஈடுபட்டு பாலியல் வன்கொடுமைக்கு சிறுமியை உட்படுத்தியுள்ளனர் என்றனர்.

Read more: அதிக நேரம் கழிவறையில் இருப்பவரா நீங்கள்??? கட்டாயம் உங்களுக்கு இந்த பிரச்சனை வரும்..

Tags :
boy bestieinvestigationsexual abuse
Advertisement
Next Article