நெஞ்சை ரணமாக்கும் கொடூர சம்பவம்.. பள்ளி வாசலில் நின்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்..
கன்னியாகுமரி மாவட்டம், மணலிக்கரை என்ற பகுதியில், அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 17 வயதான சிறுமி ஒருவர், இந்த பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்ட சிறுமி, கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மாணவி உள்பட 14 மாணவிகள் கைப்பந்து போட்டியில் கலந்துகொள்ள தங்களின் உடற்பயிற்சி ஆசிரியருடன் திருச்சி சென்றுள்ளனர். போட்டி முடிந்து, இரவு நேரத்தில் மாணவிகள் பள்ளியில் வந்து இறங்கியுள்ளனர்.
அப்போது மாணவி, தன்னை அழைக்க தனது தந்தை வந்து விடுவார் என்று கூறி, பள்ளிக்கு வெளியே உள்ள சாலையில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 37 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், மாணவியிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது மாணவி தனது தந்தை வருவதற்காக காத்திருப்பதாக கூறியுள்ளார். தான் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிடுவதாக கூறி, அந்த மாணவியை பைக்கில் ஏற்றியுள்ளார். பின்னர் அவர் , ஒரு வீட்டிற்க்கு அழைத்து சென்று மாணவிக்கு கூல் ட்ரிங்ஸ் கொடுத்து வலுகட்டயமாக குடிக்க வைத்துள்ளார்.
அப்போது அங்கு இருந்த வேறொரு நபரும் சேர்ந்து சிறுமியை வலுகட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் மாணவி அலறி துடித்துள்ளார். பின்னர், ஒரு கட்டத்தில் சிறுமி பலமாக கத்தியதால் வெளியே அனுப்பி உள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி, அழுது கொண்டே தனது வீட்டிற்க்கு சென்றுள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை எல்லாம் கூறி அழுதுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பவம் குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், காவல் நிலையத்தில், மாணவியை அழைத்துச் சென்ற ரித்திஷ் குமாரையும், வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்த பைசல் கானையும் அடைத்து வைத்து, பின்னர், பைசல் கானை மட்டும் ரிமாண்ட் செய்ததாகவும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியை தப்பிக்க விட்டதில் மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.