முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி...!

School Education Minister Anbil Mahes admitted to hospital
05:19 AM Oct 02, 2024 IST | Vignesh
Advertisement

வயிற்று வலி காரணமாக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தான் பதவியேற்றது முதல் துறைக்கு கீழ் வரும் பள்ளிகள் மற்றும் நூலகங்களில் திடீர் ஆய்வு செய்து வருகிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் நேரடியாக சென்று அங்குள்ள பள்ளிகள், நூலகங்களில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று ஆய்வை முடித்து கொண்டு சென்னைக்கு திரும்பும் போது அமைச்சருக்கு நேற்று மாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சையில் அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
anbil magheshChennaihospitalMinister anbilstomach pain
Advertisement
Next Article