முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

+2 Exam Results | திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகுமா .? பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட முக்கிய தகவல்.!!

08:58 PM May 02, 2024 IST | Mohisha
Advertisement

2 Exam Results: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிட தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Advertisement

பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் கடந்த மார்ச் மாதம் மூன்றாம் தேதி தொடங்கி 22ஆம் தேதி முடிவடைந்தது. 3,302 மையங்களில் நடைபெற்ற பொது தேர்வில் 7,534 பள்ளிகளில் படித்து வந்த 7,80,550 மாணவ மாணவிகளும் 8,190 தனித் தேர்வுகளும் தேர்வு எழுதினர். இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள 86 மையங்களில் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி முடிவடைந்தது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தபடி மே மாதம் 6-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறது. இந்தத் தேர்வு முடிவுகளை( 2 Exam Results) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்தின் நடைமுறை அமலில் உள்ளது.

இதன் காரணமாக தேர்தல் முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட ஒப்புதல் கிடைத்தால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார். ஒருவேளை அனுமதி மறுக்கப்பட்டால் அரசு தேர்வு துறை இயக்குனர் 2 தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிடுவார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Read More: “Virat Kohli – ஐ விட சிறந்த வீரர் ஹர்திக் பாண்டியா..” முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் சர்ச்சை பேட்டி.!!

Tags :
election commissionPlus 2 Exam ResultsSchool Educatiuon Ministry
Advertisement
Next Article