For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

1000 இளம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் உயர் கல்வி பெற மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை...!

07:55 AM Nov 16, 2023 IST | 1newsnationuser2
1000 இளம் ஆராய்ச்சியாளர்கள்  மாணவர்கள் உயர் கல்வி பெற மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை
Advertisement

இளம் சாதனையாளர்களுக்கான உயர் கல்வி உதவித்தொகை திட்டம் - ஸ்ரேயாஸ் திட்டம் 2021-22 முதல் 2025-26 வரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிறருக்கு நடைமுறையில் உள்ள இரண்டு மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய உதவித்தொகை. டாக்டர் அம்பேத்கர் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான கல்விக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் தரமான உயர் கல்வி பெறுவதற்கான உதவித்தொகை மற்றும் வெளிநாட்டு படிப்புக்கான கல்விக் கடனுக்கான வட்டி மானியம் ஆகியவற்றை வழங்குவது இத்திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.

ஓபிசி மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களில் எம்.பில் மற்றும் பி.எச்.டி போன்ற பட்டங்களைப் பெற தரமான உயர் கல்வியைப் பயில்வதற்கு ஓபிசி மாணவர்களுக்கு நிதி உதவியை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் எம்.பில்/ பி.எச்.டி பட்டங்களுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆண்டுக்கு மொத்தம் 1000 இளம் ஆராய்ச்சி கல்வி உதவித்தொகைகளை வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement