For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Scholarship: 60 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை..! எப்படி விண்ணப்பிப்பது...?

06:59 AM Feb 23, 2024 IST | 1newsnationuser2
scholarship  60 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை    எப்படி விண்ணப்பிப்பது
Advertisement

Scholarship: 60 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

Advertisement

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோரது உச்ச கட்ட வருமான வரம்பு ரூ.2.5 இலட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் (National Scholarship Portal) Renewal Application என்ற இணையதளத்தில் சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவு செய்து விண்ணப்பித்தினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள், முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகையானது‌ வழங்கப்படும்.

எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவியர்கள் தேசியகல்வி உதவித்தொகைத்தளத்தில் (National Scholarship Portal) New Registration என்ற இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பெறப்படும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுகளை Fresh Application என்ற இணைப்பின் கீழ் பதிவு செய்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

English Summary: Scholarship: Scholarship for students who have secured 60 percent marks

Tags :
Advertisement