பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருது...! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...!
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருதுகள், 2023-ன் கீழ் பரிந்துரைகளைப் பதிவு செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் ஜனவரி 3, 2024 அன்று தொடங்கப்பட்டது. அதன்படி , 12 முன்னுரிமைப் பிரிவுத் திட்டங்களின் கீழ் மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சி. இந்தப் பிரிவில் 10 விருதுகள் வழங்கப்படும்.அடுத்ததாக, மத்திய அமைச்சகங்கள் / துறைகள், மாநிலங்கள், மாவட்டங்களுக்கான கண்டுபிடிப்புகள் மீது 6 விருதுகள் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய தரவுகளின் தேவை மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவோருக்குப் பிரதமரின் விருதுகள் 2023-ன் கீழ் www.pmawards.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.01.2024 என்பது 12.02.2024 அன்று மாலை 5.00 மணி வரை என நீட்டிக்கப்பட்டுள்ளது.