For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாநிலங்களின் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்கும் திட்டம் தொடக்கம்...!

08:56 AM Jan 31, 2024 IST | 1newsnationuser2
மாநிலங்களின் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்கும் திட்டம் தொடக்கம்
Advertisement

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாநிலங்களின் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் அலுவலகங்களில் கணினிமயமாக்கல் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய அவர்; டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், டிஜிட்டல் ஒத்துழைப்பு மூலம் கிராமங்களை சென்றடையத் தொடங்கியுள்ளது. தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், மாநிலங்களின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகியவற்றின் கணினிமயமாக்கல் தொடங்கி ஒட்டுமொத்த கூட்டுறவு அமைப்பையும் மோடி அவர்கள் நவீனப்படுத்தியுள்ளார்.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் சுமார் ரூ.225 கோடி செலவாகும் என்றும், திரு அமித் ஷா கூறினார். இது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்றும், நடுத்தர மற்றும் நீண்ட கால கடன்களை நாடும் விவசாயிகளுக்கு இன்று முதல் ஒரு வசதி தொடங்குகிறது என்றும் அவர் கூறினார். வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் கணினிமயமாக்கல் திட்டத்தின் கீழ், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1851 வட்டார வளர்ச்சி வங்கி வங்கிகளை கணினிமயமாக்கி, அவற்றை பொதுவான தேசிய மென்பொருள் மூலம் நபார்டு வங்கியுடன் இணைப்பதாகும்.

பரிவர்த்தனை செலவுகளைக் குறைத்தல், விவசாயிகளுக்கு கடன் விநியோகத்தை எளிதாக்குதல் மற்றும் திட்டங்களின் சிறந்த கண்காணிப்பை செயல்படுத்துதல் ஆகியவற்றை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

Advertisement