கொத்தாக சிதறிய உடல்கள்!… ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து!… பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
Chemical Factory Fire: தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள டோம்பிவிலி எம்ஐடிசி பகுதியின் 2 ஆம் கட்டத்தில் அமைந்துள்ள அமுதன் கெமிக்கல்ஸில் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானது. விபத்து ஏற்பட்டதையடுத்து, மளமளவென தீப்பிடித்து, அருகில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு பரவியது. இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மேலும், இந்த தொழிற்சாலையின் அருகில் இருந்த கார் விற்பனையகம் மற்றும் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்த கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகளும், கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்து சிதறியுள்ளன. தொழிற்சாலையில் எரியும் தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், விபத்து நடந்த தொழிற்சாலைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பகல் நேர பணியில் இருந்த தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Readmore: ஏர் கூலரால் ஏற்படும் பிரச்னைகள்!! சமாளிக்க எளிய டிப்ஸ் இதோ!!